tamilnadu

img

நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது

பால் முகவர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை, ஜன.18- தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி 20 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாக அறி வித்துள்ளன.  தமிழகத்தில் மொத்த பால் விற்பனை யில் 84 சதவீதம் தனியார் பால் நிறு வனங்களும் 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு மூன்று முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலே தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக ன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறு வனங்கள் திங்கட்கிழமை முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரை யிலும் தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபா யும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலை யடைந்துள்ளனர். 

விலை உயர்வை  அரசு அனுமதிக்கக்கூடாது 

தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலா ளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், தனியார் நிறு வனங்கள் லிட்டருக்கு ரூ. 4 வீதம் பால் விலையை திங்கட்கிழமை முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. தனியார் நிறு வனங்கள் பால் விலையை உயர்த்த அனு மதிக்கக்கூடாது. அரசின் அனுமதியுடன் தான் பால் விலையோ, கொள்முதல் விலையோ கூட்டவோ, குறைக்கவோ வேண்டும். இதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆண்டுக்கு 2, 3 முறை தனியார் நிறு வனங்கள் பால் விலையை உயர்த்துவ தால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார் கள். அத்தியாவசிய தேவையான பால் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசின் கட்டுப்பாட்டின் கீழ் விலை நிர்ண யம் செய்ய விதிமுறைகளை வகுக்க வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.