திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்திடுக தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

உதகை, மார்ச் 16- நிலுவை சம்பளத்தை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தோட்ட தொழிலாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்த னர். இம்மனு குறித்து அவர்கள் கூறுகை யில், நீலகிரி மாவட்டம், குந்தா அருகில்  உள்ள தனியார் தாய்சோலை எஸ்டேட் டில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிற் சாலையில் வேலை செய்பவர்கள் ஏழை,  எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அன்றாட வாழ்கையை நடத்த தங்களுக்கு  கிடைக்கும் சம்பள பணத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலமாக சம்பளத்தை வழங்காமல் உள்ளனர். எனவே நிலுவை சம்பளத்தை வழங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  மனுவில் தெரிவித்துள்ளனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி,  ஐஎன்டியுசி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜியிட மும், தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேலிடமும் நேரில் சந்தித்து மனு  அளித்தனர். அப்போது சிஐடியு தொழிற் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ஆல்தொரை, ருத்ரா, ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் போஜராஜ், மாதேவன், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் செல்வகுமார், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சம்பளம் தொடர்பாக தொழிலா ளர் அலுவலகத்தில் மார்ச் 24ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது எனவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் வலு வான போராட்டம் நடத்த தொழிற்சங் கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித் துள்ளனர்.

;