உதகை, அக். 30 - உதகை அருகே கழிவு நீர் தேக்கத் தொட்டியிலிருந்து வழியும் கழிவு நீர் கசிவை சீர் செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள முள்ளி கொரை பகுதியில் கழிவுநீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து பல நாட்களாக கழிவு நீர் கசிந்து நடைபாதையில் வழிகிறது. இதனால் இப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரி களிடம் புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக கசிவை சீர் செய்து கழிவு நீர் வெளியேறுவதை தடுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.