1913 - கார் உற்பத்தியில் மட்டுமின்றி, அனை த்து உற்பத்தித்துறைகளிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற் படுத்திய, கன்வேயர் பெல்ட் மீது நகரும் மேடைகளைக் கொண்ட, கோப்பு வரிசை (அசெம்ப்ளி லைன்) என்பதை, உலகிலேயே முதன்முறையாக ஹென்றி போர்டு தன் தொழிற்சாலையில் நடைமுறைப்படுத்தினார். (கோர்ப்பு, கோர்த்தல், கோர்வை ஆகியவை தவறானவை. கோப்பு, கோத்தல், கோவை என்பவையே சரியான தமிழ்ச்சொற்கள்.) ஏற்கெ னவே, அவ்வாண்டின் அக்டோபரில், சில பாகங்களின் தயாரிப்பில் கோப்பு வரிசையை போர்டு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இந்த முழுத் தயாரிப்புக்குமான கோப்பு வரிசை, ஒரு காரின் தயாரிப்பு நேரத்தை பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாகக் குறைத்தது.
தொழிற்புரட்சிக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே, சீனாவில், விவசாயக் கருவிகள், ஆயுதங்கள் முதலான வற்றின் பெருவீத உற்பத்தியில், முழுக் கருவியையும் ஒருவரே உருவாக்காமல், தொழிலாளர்கள் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் உருவாக்கும் ‘வேலைப் பிரிவினை’ என்பது நடைமுறையிலி ருந்துள்ளது. 1100களில், வெனிஸ் குடியரசின் கப்பல் கட்டும் தளமான ‘வெனிசின் ஆயுதத்தொழிற்சாலை’யில், 16 ஆயிரம் தொழிலாளர்கள், அடுத்தடுத்த இடங்களில் ஒவ்வொரு பாகமாகக் கோத்து, ஒரு நாளைக்கு ஒரு (கேலினி என்னும் துடுப்பும், பாய்மரமும் கொண்ட) கப்பலை உருவாக்கியிருக்கிறார்கள். தொழிற்புரட்சிக்கால உற்பத்தி உயர்வின்போது, வேலைப் பிரிவினை பரவியது. நெப்போலியப் போர்க்காலத்தில், இங்கிலாந்து கடற்படைக்குத் தேவையான கருவி களை உருவாக்க, மார்க் புரூனெல் என்பவரின் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டதே உலகின் முதல் வரிசையாகக் கோக்கும் தொழிற் சாலையாகும்.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் ஒரு கசாப்பு நிறுவனத் தில், மாமிசத்துக்காகக் கொல்லப்பட்ட விலங்கின் உடல் நகர்ந்து செல்ல, ஒவ்வொரு மேடையிலும் ஒரு தொழிலாளி குறிப்பிட்ட பாகத்தைப் பிரித்து பதப்படுத்தும் (பிரிப்பு வரிசை!) முறை இருந்தது. இதைப் பார்த்தே போர்டு தன் கோப்பு வரிசையை உருவாக்கினார். கார் உற்பத்தியில் அமெரிக்காவிலேயே ரேன்சம் ஒட்ஸ் என்பவர், தனது ஓல்ட்ஸ்மொபைல் நிறுவனத்தில், வரிசையாகக் கோக்கும் முறையை 1901இலேயே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்காலத்திய முறையை போர்டுதான் உருவாக்கினார். இந்தக் கோப்பு வரிசை, துறை சார்ந்த திறன்பெற்ற(ஸ்கில்ட்) தொழிலாளர்களின் தேவையை நீக்கிய தாலேயே, வாழ்க்கைச் செலவுகள் குறைவான வளரும் நாடுகளின் தொழி லாளர்களைக் குறைந்த கூலியில் பயன்படுத்திக்கொண்டு, அந்நாடுக ளுக்கு தொழிற்சாலைகள் இடம்பெயர முக்கியக் காரணியாகியது. அனைவருக்கும் கார் என்ற போர்டின் முழக்கத்தை நிறைவேற்றுமள வுக்கு கார் உற்பத்திச் செலவைக் குறைத்த கோப்பு வரிசை, இன்று அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
- அறிவுக்கடல்