நாமக்கல், அக்.20- பரமத்திவேலூர் சந்தை யில் ஞாயிறன்று நடை பெற்ற நாட்டு கோழி விற்ப னையும், விலையும் அதிக ரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதில் நாட்டுக்கோழி வகைகளான கிரிராஜா, அசில் போன்ற ரகங்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இக்கோழிகளின் எடை பொருத்து அதன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இது கிலோவுக்கு ரூ.350 முதல் 400 வரை கடந்த வாரம் விற்பனை செய் யப்பட்டது. இந்த வாரம் சேவல் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகமாக விற்பனையானது. இதேபோல் பந்தய சேவல்களான கீரி, காகம் போன்ற ரகங்களும் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை சண்டை யிட வைத்து, அதன் திறன் பொருத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் விற்பனையானது. கடந்த வாரம் புரட்டாசி மாதம் என்பதால் சந்தை கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில், ஞாயிறன்று ஏராளமான வியாபாரிகள் சேவல்களை வாங்க குவிந்ததால் வியாபாரம் களை கட்டியது.