tamilnadu

பொறியியல் கல்லூரிகளின் தர வரிசையில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம்

திருச்செங்கோடு, மே 19-அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டது. இதில் 30 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் 89.59 சதவிகித தேர்ச்சி பெற்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது. இதனையடுத்து கோவை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, ஈரோடு பண்ணாரியம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, விருதுநகர் மெப்கோ பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி நேசனல் பொறியியல் கல்லூரிகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.