tamilnadu

img

நல்லாடையில் மழை பாதிப்பு.... தமிழக முதல்வர் ஆய்வு...

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண் டார்.புரெவி புயல் காரணமாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட செம்பனார்கோவில் வட்டாரத்தில் சுமார் 15815 ஹெக்டர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தொடர் மழை காரணத்தால் சுமார் 11645 ஹெக்டர் பயிர்கள் நீரில் முழுகி பாதிப்பு ஏற்பட்டது. இதில் நல்லாடை ஊராட்சி பகுதியில் சுமார் 260 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக் கப்பட்டது. 

மேலும் செம்பனார்கோவில் வட்டாரத்தில் 885 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு, வாழை, கத்தரி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் நீரில்மூழ்கி பாதிக்கப்பட்டது. நல்லாடைஊராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால்ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதல்வர்எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர் கள் ஒ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் மற்றும்  அனைத்துத் துறை
அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

;