சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிதாலுகா கொள்ளிடம் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வுசெய்தார்.
அப்போது ஆலாலசுந்தரம் ஊராட்சி திருஞானசம்பந்தம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள் ளும்போது, அக்கிராமத்தில் முத்து என்பவரின் மனைவி 127 வயதான கண்ணம்மாள் மூதாட்டியை நேரில் சென்று பார்த்து அவரிடம் பேசி நலம்விசாரித்தார். மேலும், அவருக்கு பொன் னாடை போர்த்தி பாராட்டினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ஏ.வி. சிங்காரவேலன், பி.மாரியப்பன், சீர்காழி வட்டசெயலாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம், மாவட்டகுழு உறுப்பினர்கள் கே.கேசவன், டி.துரைகண்ணு உள்ளிட் டோர் உடனிருந்தனர்.127 வயது மூதாட்டியின் மகன்கள் நான்கு பேர். ராஜமாணிக்கம் என்பவர் மூத்த மகன். அவர் இப்போது இறந்துவிட்டார். இரண்டாவது மகன் நாகலிங்கம். அவருடைய மனைவி மீனாட்சி. அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார்.தற்போது மூதாட்டி, மீனாட்சியின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.மூன்றாவது மகன் ராமன். அவருடைய மனைவி அருள். நான்காவது மகன் லட்சுமணன். அவருடைய மனைவி ராணி. மகன்கள் 4 பேருக் கும் 9 குழந்தைகள். மூதாட்டிக்கு பெண் பிள்ளைகள் மூன்று பேர். செல்வம்மாள், கருப்பாயி, ரேவதி ஆகியோர் மூலம் ஏழு குழந்தைகள். ஆக மொத்தம் மூதாட்டிக்கு 16 பேரக் குழந்தைகள் உள்ளனர்.