tamilnadu

img

பள்ளி சத்துணவு மையம் ஆய்வு

சீர்காழி, நவ.14- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தை சீர்காழி எம்.எல்.ஏ பாரதி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். சத்து ணவு சமைப்பதில் சுகாதாரம் கடைபிடிக் கப்படுகிறதா, நல்ல தண்ணீர் சமைய லுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். அங்கு சமைக்கப்பட்ட உணவை ருசி பார்த்து ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறுகையில், சத்துணவு சமைக்கும் போது அமைப்பாளர் மற்றும் ஊழியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சமைத்த உணவை ருசித்து பார்த்து சரியான உணவாக இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உரிய வகையில் சுகாதாரத்தை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார். கொள்ளிடம் ஒன்றிய செயலா ளர் நற்குணன், கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் பூராசாமி மற்றும் தலைமை யாசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.