விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை, செப்.19- நாகை மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியில் உள் புகார்கள் குழு சார்பில் மாணவ- மாணவிகள் இடையேயான சமத்துவத்தின் முக்கியத்து வம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்து பேசினார். உயர்நீதிமன்ற வக்கீல் எஸ்.மதன்குமார் பேசினார். உள் புகார்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.சத்தியபாமா வர வேற்றார் பேராசிரியை ஏ. சங்கரி நன்றி கூறினார்.
விவசாயிகளுக்கு உழவு மானியம்
சீர்காழி, செப்.19- நாகை கொள்ளிடம் பகுதியில் உழவு மானியத்திற் கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள விவசாயி களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கூறுகையில், கொள்ளிடம் வட்டா ரத்தில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ 600 வீதம் வேளாண் துறை மூலம் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உழவு மானியத்தைப் பெற அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி உழவு மானியத்திற்கான விண்ணப்பத்தைப் பெற்று உட னடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என்றார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், செப்.19-திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரி வித்துள்ளார்.