tamilnadu

தூத்துக்குடி, தேனி முக்கிய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, ஜன.2- ஓட்டப்பிடாரம் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது. அதில் மொத்தம் 1130 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் மொத்தம் 2 ஆயி ரத்து 400 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தூத்துக் குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 2 கட்டங்களில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  ஓட்டப்பிடாரம் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக் குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலு வலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய் தார்.

ஊராட்சி தலைவர் தேர்தலில் 14 பேர் வெற்றி

தூத்துக்குடி, ஜன.2- தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 403பேரில் வெற்றி பெற்றுள்ள 14பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் 17, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 174, கிராம ஊராட்சி தலைவர் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2,943 என மொத்தம் 3,537 பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வியாழனன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சா யத்து தலைவர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 14 வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. நாகம்பட்டி - கோ. மாரியப்பன், குதிரைகுளம் - சண் முகையா, கீழமுடிமண் - பிரியா, ஓனமாக்குளம் - பெரு மாள், பசுவந்தனை - லெட்சுமி, முள்ளூர் ராமசாமி, ஆதனூர் - பாலமுருகன், காட்டுநாயக்கன்பட்டி - சரஸ்வதி, மீனாட்சிபுரம் சுந்தரி, எப்போதும்வென்றான் -முத்துகுமார், தெற்கு கல்மேடு - முத்துமணி, கே.சண்முகபுரம் - இந்துமதி, சந்திரகிரி - வீரலெட்சுமி, கொல்லம்பரம்பு - சந்திரா.

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் திடீர் மரணம்

தூத்துக்குடி, ஜன.2- திருச்செந்தூரில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட பெண் வேட்பாளர் உடல் நலக்குறைவால் திடீரென கால மானார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மனைவி பேச்சி யம்மாள் (75). ஓய்வு பெற்ற தபால்துறை அதிகாரி. இவர் களுக்கு 4 மகன், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பேச்சி யம்மாள் சமூக சேவகராகவும், தூத்துக்குடி மாவட்ட காங்கி ரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். மேலும் இவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேல திருச்செந்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு விமான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதியில் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலை யில்புதன்கிழமை மாலை வீட்டில் இருந்த பேச்சியம்மா ளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடி யாக அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்நிலையில் அவர் போட்டியிட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழனன்று காலை தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு அமமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி, ஜன.2- கடம்பூர் அருகே பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தாக அமமுக மாநில நிர்வாகி மாணிக்கராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. இவர், அமமுக தேர்தல் பிரிவு செய லாளராகவும், தென் மண்டல பொறுப்பாளருமாக உள்ளார். கடந்த 26 ஆம் தேதி காமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் பேசும்போது, சாதி ரீதி யாகவும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் மனைவி பொன்னுலட்சுமி (24) என்பவர் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்துள் ளார். அவரது புகாரின் பேரில் மாணிக்கராஜா மீது 153ஏ, பெண்களை இழிவுபடுத்துதல், சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மரத்தின் மீது  பைக் மோதியதில் வாலிபர் பலி

தேனி, ஜன.2- தேனி அருகே இருசக்கர வாகனதில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்த கன்னையா மகன் தவமணி (24).இவர் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி வந்து கொண்டிருந்தார் .கம்மவார் கல்லூரி அருகே உள்ள அண்ணாமலை நகர்  அருகே சென்ற போது நிலை தடுமாறி மரத்தின் மீது மோதினார்.. உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.