tamilnadu

img

திடீர் கனமழையால் விவசாயிகள் கவலை 50 ஆயிரம் ஏக்கர் அறுவடை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

குடவாசல், ஜன.19- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சனிக் கிழமை பெய்த கன மழையால் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்ததை அடுத்து மேட்டூர் அணை பல முறை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நடப்பு பருவத்தில் வலங்கைமான் தாலுகாவில் சம்பா பயிர் பத்தாயிரத்து 535 ஹெக்டேரி லும், தாளடி பயிர் நான்காயிரத்து 48 ஹெக் டேரிலும் இயந்திர நடவு, கை நடவு மற்றும் நேரடி விதைப்பு ஆகியவை மூலம் சாகு படி மேற்கொள்ளப்பட்டது.  இதில் நான்காயிரத்து 43 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது சனிக் கிழமை பெய்த மழையினால் வலங்கை மான் பகுதியில் விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அறுவடை பணிகள் துவங்க இருந்த நிலையில் தற்போது மழை யின் காரணமாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த  நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் அறு வடை செய்ய ஒரு மணி நேரம் ஆகும் நிலை யில் தற்போது நெல் அறுவடைக்கான நேர மும் செலவும் இரண்டு மடங்காகும்.  மேலும் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்பனை செய்வதிலும், இருப்பு வைத்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதே போல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தக் கூடிய வைக்கோல் மேலும் பெய்யக் கூடிய மழையால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பா அறு வடைக்கு முன் தெளிக்கப்பட்ட பயறு மற் றும் உளுந்து போன்றவை தற்போது பெய்த மழையால் பாதிப்படையும் என விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கூறும்போது, இந்த ஆண்டு பல் வேறு இடர்பாடுகளை கடந்து விவசாயிகள் சம்பா சாகுபடியை துவங்கினாலும் மேட் டூர் அணையில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப் பாடு இன்றி வந்த நிலையில் இயற்கை யின் ஒத்துழைப்புடன் ஆற்றுப் பாசன விவ சாயிகள், பம்புசெட்டு விவசாயிகளும் சிறப் பான முறையில் சம்பா சாகுபடி செய்திருந்த னர். இந்த நிலையில் திடீரென்று கடந்த சனிக்கிழமை திருவாரூர் மாவட்டம் முழு வதும் கடுமையான மழை பெய்து அறு வடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் சாகுபடி செய்த நெல்லை காப்பாற்ற வழி யின்றி  விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் மேல் பாதிப்படைந்துள்ளதாகவும், இதற்கு உரிய நிவாரணம் கிடைத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.  எனவே உடனடியாக மாவட்ட நிர்வா கம் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகளை துவங்க வேண்டும். நிவாரணத்தை முறை யாக விவசாயிகள் பெற நடவடிக்கை எடுத்து விவசாயிகள் அச்சத்தில் இருந்து காக்க வேண்டும் என்றார்.

;