tamilnadu

img

கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் இணைந்து நிற்போம்! 15 வது ஆண்டாக வெண்மணி சங்கமத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள்

திருவாரூரில் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர்களின் வெண்மணி தியாகிகள் வீரவணக்க நிகழ்ச்சியில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் என்.சீனிவாசன் பேசினார். க.சுவாமிநாதன், இரா.புண்ணியமூர்த்தி, ஜி.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர், டிச.25- இன்சூரன்ஸ் ஊழியர்கள் 15 வது ஆண்டாக வெண்மணி சங்கமம் நிகழ்ச்சியை திருவாரூரில் நடத்தினர். கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமை போராட்டத்திலும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும் இணைந்து நிற்போம் என உறுதியேற்றனர்.
பாராட்டு நிகழ்ச்சி
திருவாரூரில் 500க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்ற அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.ஆனந்த் (தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்) தலைமை ஏற்றார். என்.சீனிவாசன் (மாநிலக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஆர்.  புண்ணியமூர்த்தி (முன்னாள் துணைத்தலைவர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) சித்ரா (மதுரை கோட்ட மகளிர் துணைக் குழு) க.சுவாமிநாதன் (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு) செல்வராஜ், வி.சேதுராமன், விஜயகுமார் (தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்) ஆகியோர் உரையாற்றினர்.  மாதர் சங்க நடைபயணத்தில் முழுமையாக 10 நாட்களும் பங்கேற்ற சித்ரா, ராஜேஸ்வரி, கார்த்தீஸ்வரி  ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர். 35 வயதுக்குட்பட்ட 50க்கும்  மேற்பட்ட இளைய பங்கேற்பாளர் களுக்கும், மகளிருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  ஜி.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
நினைவிடத்தில் அஞ்சலி
500 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்களின் வீர வணக்க அணி வகுப்பை ஆர். மதுபால் (திரு நெல்வேலி கோட்டக் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்) கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலமாக சென்று வெண்மணி நினைவிடத்த்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

;