மன்னார்குடி, பிப்.5- காசோலையில் போலிக் கையெழுத்திட்டு ரூ.2.5 லட்சத்தை வங்கியிலிருந்து பெற முயற்சித்தது மன்னார்குடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் கணக்கா ளரே செக்கில் போலியாக ஆணையரின் கையெழுத்திட்டு வங்கிக்கு அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தி ருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போல ரூ.3,42,720-க்கு போலியாக கையெழுத்திட்டு செக்கை வங்கிக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவை பற்றி கடந்த டிசம்பர் மாதம் புதிதாக மன்னார்குடி நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுள்ள நகராட்சி பொறியாளர் திருமலைவாசன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் உமாமகேஸ்வரிக்கு தெரி வித்துள்ளதாகவும். திருவாரூரிலிருந்து உதவி இயக்குநர் தலைமையில் தல தணிக்கை அலுவலர்கள் குழு நகராட்சி வரு வதாகவும் கூறினார். இம்மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நகராட்சி கணக்காளர் சரசுவதி கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்த காலத்தில் இளங்கோ என்ற நகராட்சி பொறி யாளரே பெரும்பகுதி ஆணையர் பொறுப்பில் இருந்துள்ளார். எனவே பொறியாளர் இளங்கோவையும் விசாரிக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு செக் தொகை பரிமாற்ற தணிக்கையை முழுமை யாக மேற்கொண்டு ஊழல் மற்றும் மோசடி யின் எண்ணிக்கை மற்றும் தொகை அளவை கண்டறிவதற்காக நடவடிக்கைகள் துவக்கப்படலாம் எனவும் தெரிய வரு கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது போல ஒரு மோசடி நடந்தது இப்போது கண்டு பிடிக்கப்பட்டி ருக்கிறது. இந்த இரண்டு மோசடிகள் மட்டும் தானா அல்லது இன்னும் அதிக எண்ணிக்கையில் மோசடிகள் நடைபெற்றுள்ளதா? மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு? கணக்காளர் சரசுவதி மட்டும் இம்மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க முடியுமா? வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்பே சிபிஎம் புகார்
கட்சியின் நகரக்குழுவின் சார்பில் கடந்த 17.9.2019 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக ஒரு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் மன்னார்குடி நகராட்சியில் நிலவும் மஸ்ட்டர் ரோல் ஊழல் உள்பட ஊழல் முறைகேடுகளைப் பற்றியும் வருவாய்துறை கோட்டாட்சியர் தகுதியில் ஒரு அதிகாரியை நியமித்து விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருந்தது. 154 ஆண்டுகள் பழமை யான நகராட்சியின் ஆணையர் பணியிடம் நீண்ட காலமாக காலியாக வைக்கப்பட்டுள் ளது. ஆணையர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என அந்த மனு கோரியிருந்தது. எனவே இந்த போர்ஜரி செக் மோசடி வழக்கில் உண்மையான நிலை தெரிய வருமா நியாயமான துறை ரீதியிலான நடவடிக்கை முடிவுற்ற பின் குற்றவியல் நடவடிக்கைகள் தொடுக்கப்படுமா என்பதை நகர மக்கள் எதிர்பார்க்கிறார்கள். - நமது செய்தியாளர்