tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் பிரச்சார கூட்டம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னேரி அருகில் உள்ள வேண்பாக்கம் பஜாரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பகத்சிங் நகர் கிளைச் செயலாளர் கே.செல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஏ.கலாம், பகுதி செயலாளர் இ.தவமணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.மதன், எம்.நாகராஜன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஜி.பாலன், திமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார், விக்னேஷ், மதிமுக ஒன்றிய செயலாளர் பி.ஆர்.எழிலரசன், அமைப்பாளர் ரகுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இதேபோல் பஞ்செட்டி, மெத்தூர் ஆகிய இடங்களிலும் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

;