திருவள்ளூர், மே 18-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் சனிக்கிழமையன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டாட்சியர் சிறீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அலமாரி உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா? என ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும்.