பேருந்தை சிறைபிடித்த கல்லூரி மாணவர்கள்
திருவண்ணாமலை,ஆக.4- திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருவண்ணா மலை, செங்கம், தண்டராம் பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். செங்கம் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் வழக்கமாக மதிய நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பேருந்தில் செல்கின்றனர். இந்த பேருந்து கடந்த 3 நாட்களாக உரிய நேரத்திற்கு இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவர்கள் திருவண்ணாமலையிலிருந்து செங்கம் சென்ற பேருந்தை கல்லூரி முன்பு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆதார் பதிவு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
தருமபுரி, ஆக.4- தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அரூர், தீர்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய துணை அஞ்சலகங்களில் ஆக. 5 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வது தொடர் பான அனைத்து பணிகளையும் செய்வதற்கு அஞ் சல்துறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்கனவே ஆதார் அட்டை எடுத்தவர்கள் அதில் உள்ள பிழை திருத்தம், தொலைபேசி எண்ணை மாற்றுதல், மின்னஞ்சல் மற்றும் பிறந்த தேதி மாற்றுதல் ஆகியவற்றை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். புதிதாக ஆதார் அட்டை எடுப்பவர்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்ய விரும் புபவர்கள் தங்களது தாய் அல்லது தந்தை அவர் களின் ஆதார் அட்டையுடன் நேரில் வரவேண்டும். மேலும், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற முகாம்களை தங்களது நிறுவனத்தில் நடத்த விரும்பினால் அவர்களது இடத்திலேயே சிறப்பு முகாம் மூலம் அனைவருக்கும் சேவை வழங் கப்படும். இச்சேவையை பெற விரும்புவோர் 04342-260932 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.