tamilnadu

img

வாக்காளர் பட்டியல் திருத்தம்

தாராபுரம், செப். 1 - தாராபுரத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக சார் ஆட்சியர் துண்ட றிக்கை விநியோகம் செய்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று பட்டியலில் பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் செல்போன் செயலி மூலமும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க லாம். இதுதொடர்பாக பொதுமக் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக தாராபுரம் கடை வீதியில் சார் ஆட்சியர் பவன்குமார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வரு வாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற் றும் குழுவினர் பொதுமக்களி டையே துண்டறிக்கை விநியோ கித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.