tamilnadu

img

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்

அவிநாசி, மே 7- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க 36ஆவதுஅமைப்பு தினத்தை முன்னிட்டு, கொடியேற்று விழா திங்களன்று நடைபெற்றது. தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 36 ஆவது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி வட்டக்கிளையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் அரசு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த கொடியேற்று விழாவிற்கு கருப்பன் தலைமை வகித்தார். தவமணி, விஜயலட்சுமி, சுமதி, செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மு.ஞானத்தம்பி சிறப்புரையாற்றினார். நிறைவாக ராமன் நன்றியுரை கூறினார்.