tamilnadu

img

தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடிப்பு

அவிநாசி, ஜன. 5- அவிநாசி அருகே தெக்கலுரில் ஞாயிறன்று பொதுமக்கள் தனி யார் பேருந்தை சிறைபிடித்தனர். அவிநாசி அருகே தெக்கலூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து வச திக்காக தெக்கலூர் பேருந்து நிறுத் தத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புற வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் இவ்வழியாக வந்து சென்ற தனியார், அரசு பேருந்து கள், பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் புறவழிச்சாலை மேம்பா லத்தின் மீது சென்று வந்தது. இத னால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பலமுறை மறியல் உள் ளிட்ட போராட்டங்களில் ஈடு பட்டு வந்தனர். இதற்கிடையில் மோட்டார் வாகன அலுவலர்கள் உத்தரவின் பேரில், பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் தெக்கலூர் செல்வதற் காக திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் ஏறி யுள்ளார். இதையடுத்து பேருந்து நடத்துனர் அவிநாசி அருகே வரும்பொழுது தெக்கலூரில் பேருந்து நிற்காது புறவழிச்சாலை யாக செல்லும் என்று கூறியுள் ளார்.  இதனைத்தொடர்ந்து தமிழ் செல்வி நாதம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் இறக்கி விடப்பட்டார்.  இதுகுறித்து தமிழ்செல்வி அப்பகுதி மக்களிடம் தெரிவித் தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  கோவையில் இருந்து தெக்கலூர் புறவழிச்சாலை வழியாக வந்த  தனியார் பேருந்தை சிறை பிடித்த னர். இனிவரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்வோம் என பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் உறுதிய ளித்தனர். இதையடுத்து அரை  மணிநேரத்திற்கு மேலாக சிறை பிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக் கப்பட்டது.