tamilnadu

img

திருப்பூரில் சிஐடியு தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 25 - பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டனர். வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி களில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், குடிநீர் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் துணைச் செயலா ளர் சங்கர்குமார் தலைமை வகித் தார். இதில் திருப்பூர் மாநகராட்சி,  பேரூராட்சிகள் ஒருங்கிணைப் புக்குழுச் செயலாளர் வையாபுரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பல்லடம் நகராட்சி சிஐடியு கிளைச் செயலா ளர் கிட்டுசாமி நன்றி கூறினார்.