அவிநாசி, பிப். 26- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்திற்கு சக்தியமங்கலம், மைசூர், பேராவூரணி, தருமபுரி, பென்னாகரம், புளியம்பட்டி, நம்பியூர் உள்பட்ட பகு திகளிலிருந்து 1572 மூட்டைகள் வந்திருந்தன. இதில், 320 விவசாயிகளும், 14 பருத்தி வியாபாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் டி.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,700 வரை யிலும், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.5,275 வரையிலும், மட்டரகம் ரூ.1,500 முதல் 2,500 வரையிலும் ஏலம் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.22.78 லட்சம் ஆகும்.