திருநெல்வேலி, ஆக.9- தென்காசி மாவட்டம் கடையம் அரு கேயுள்ள இரவணசமுத்திரத்தில் ரயில்வே கேட் அருகே இரயில்வே இடத் திலுள்ள ஆலமரத்தின் ஒரு பகுதி சில தினங்கள் முன்பு மழை மற்றும் காற்றால் சாய்ந்து விழுந்துள்ளது. மரத்தின் மீதி பகுதிகள் எந்த நேரத்திலும் ஒடிந்து கீழே விழுந்து உயிர்சேதம் ஏற்படும் வண்ணம் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு இரவண சமுத்திரம் முன்னாள் பஞ்சாயத்து தலை வர் புகாரி புகார் தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல கிராமங்களை இணைக்கும் முக்கி யமான போக்குவரத்து சந்திப்பில் அபாய நிலையிலுள்ள இந்த ஆலமரம் கீழே விழுந்து உயிர்சேதம் ஏதும் ஏற்படும் முன் இரயில்வே அதிகாரிகள் விரைந்து நட வடிக்கை எடுத்து மரத்தை அகற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.