வலுக்கட்டாயமாக விவசாயிகளை கைது செய்வதா?
சிபிஎம் கடும் கண்டனம்
திருப்பூர், ஆக. 23- விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவ சாயிகள் தொடர்ச்சியாக உறுதியுடன் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனினும் பல்லடம் சாலையூர், காளியப்பன் கவுண்டன் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர்மின் கோபு ரம் அமைக்க நில அளவீட்டு பணிக்கு வருவாய்த் துறையி னர், பவர் கிரீட் அமைப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் வந்து விளைநிலங்களில் விவசாயிகள் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்து பணியைத் தொடங்க முயன் றது கடும் கண்டனத்துக்குரியது. அரசு நிர்வாகம் எந்த மாற்று ஆலோசனையையும் பரி சீலிக்கக் கூட தயாராக இல்லாமல், வலுக்கட்டாயமாக இப்ப ணியை மேற்கொள்ள பிடிவாதமாக முயற்சித்து வருவது விவ சாயிகளைக் கிஞ்சித்தும் மதிக்காத விபரீதமான போக்கா கும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூரிய சக்தி, காற் றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை புதை வட மாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை, ஆஸ்திரே லியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிடு கின்றனர். அண்டை நாட்டுக்கும், தொலைதூர நாடுகளுக் கும் இதுபோன்ற திட்டம் சாத்தியம் என்றால், உள்ளூரில் விவசாயிகள் பாதிக்காதபடி சாலையோரமாக புதைவட மாக கொண்டு செல்ல முடியாதா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ஆனால் விவசாயிகளை அலட்சியப்படுத்தும் அரசு, காவல் துறை மூலம் வன்முறையாக மிரட்டிப் பணிய வைத்து விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. பெரும் எண்ணிக்கையில் காவலர்க ளைக் குவித்து பெண்கள், முதியோர், விவசாயிகள், விவசாய கூட்டியக்கத் தலைவர்கள் என அனைவரையும் கைது செய்திருப்பதும், அவர்களை அலைக்கழிப்பதும் அத்துமீறிய அராஜக நடவடிக்கை ஆகும். இதை அனு மதிக்க முடியாது. அரசு நிர்வாகம் இத்தகைய அராஜக நடவ வடிக்கையைக் கைவிட்டு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியியுள்ளார்.
செயற்கையான அயோடினை உப்பில் சேர்க்க எதிர்ப்பு
சென்னை,ஆக. 22- அயோடைடு உப்பை பயன்படுத்தும் பொதுமக்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் பாதகமான விளைவுகளை அறியமுடியும் என்று பெரு நிறுவனங்களை எதிர்த்துப்போராடும் நுகர்வோர் ஆர்வலர் சிவ் சங்கர்குப்தா கூறியுள்ளார். இயற்கை உப்பில் மிதமான அளவு அயோடின் உள்ளது. எனவே செயற்கை அயோடின் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உப்பு சுத்தி கரிக்கப்பட்டு இயற்கையாகவே இருக்கும் அதன் அத்தியாவ சிய கூறுகைளை அகற்றும்போது உப்பு உற்பத்தி யாளர்கள் செயற்கை அயோடினை அதில்சேர்த்து சந்தைப்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார். அயோடைஸ் உப்பு பொட்டாசியம் ஃபெரோசியானைடு போன்ற நச்சு சேர்மங்களை கொண்டது. இந்த உப்பை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாக நிறுவனங்கள் கூறினாலும் அது நச்சுத்தன்மை கொண்டது என்று அவர் கூறினார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே
அஞ்சல்துறை ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.23- பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் அஞ்சல்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்கள் தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு அனைத்து அஞ்சல் ஊழியர்கள் சங்க ங்களின் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் அறிவித் திருந்தது. இதன் ஒருபகுதியாக திருச் செங்கோடு அஞ்சல் அலுவலகம் முன்பு அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜீடிஎஸ் ஊழியர் களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்க்கு தாரை வார்க்கும், தொழி லாளர்கள் விரோத போக்கைக் மத்திய அரசு கைவிட வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முன்னதாக, இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு, பி3வது கிளைத் தலைவர் ஆர்.மாதேஸ் வரன் தலைமை தாங்கினார். பி 4வது கிளைத் தலைவர் வி.வீரமணி, ஜீடிஎஸ் கிளைத் தலைவர் கே.பொன்னுசாமி உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன் னால் செயலாளர் கே.சுப்பிரமணியன், பி.3.செயலாளர் எம்.ஜெகதீஸ்வரன், ஜீடிஎஸ் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் கே.சி.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு, சங்க கிரி, வேலூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.