tamilnadu

சீர்காழி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

முதியோர் உதவித்தொகை வழங்கல்  

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே நல்லவிநயாகபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மனி தலைமை வகித்தார். சீர்காழி தாசில்தார் சாந்தி வரவேற்றார். தனி தாசில்தார்கள் மலர்விழி, இந்துமதி முன்னிலை வகித்தனர். முகாமில் கோட்டாட்சியர் கண்மணி, 13 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக் கான ஆணை மற்றும் 10 பேருக்கு இலவச மனைப் பட்டா வழங்கி பேசினார். துணை தாசில்தார் கள் விஜய்ராணி, சேதுராமன், செந்தில், சாந்தி, தோட்டக்கலை அலுவலர் சுகன்யா, உதவி அலு வலர்கள் கல்யாணம், செல்வராஜ், முன்னாள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நகாராஜன், வருவாய் ஆய்வாளர் அல்போன்ஸ், வி.ஏ.ஓ துரை வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.  கடந்த 14-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்ட மக்கள் குறை தீர் முகாம் தற்போது நடைபெற்றது. மேலும் எந்த முன்னறிவிப்பு இன்றி முகாம் நடந்ததால் மிக குறைவான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர்

ஆண், பெண்களுக்கு கயிறு கைவினை பயிற்சி  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள மத்திய அரசின் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் 6 மாத கால கயிறு கைவினை பயிற்சி நடைபெற உள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. பயிற்சியின் போது மாதம் ரூ 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உண்டு.  வரும் ஜனவரி 1-ல் தொடங்கும் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ பெற்றுக் கொள்ள லாம். அல்லது www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை, “அலுவலகப் பொறுப்பாளர்” மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி வல்லம் வழி, தஞ்சாவூர். 613403 என்ற முகவரிக்கு டிச.16 க்குள்  வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04362-264655 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அனாதீன இடங்களை நிரந்தரப்படுத்தி தரக் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.30- தஞ்சாவூர் மாவட்டம், பூத லூர் தாலுகா அயோத்திப் பட்டி விவசாயிகளுக்கு அவர் கள் வசம் உள்ள விவசாய நிலம், குடியிருப்புக்கு (அனாதீனம் செய்து விவ சாயிகளுக்கு நிரந்தரப்படுத்த வேண்டும். கோவில்பத்து விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொ கையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  இதுகுறித்து விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செய லாளர் என்.வி.கண்ணன் ஆட்சியர் ம.கோவிந்தரா விடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பூதலூர் தாலுகா செங்கிப் பட்டி வட்டம் அயோத்திப் பட்டியில் வசித்து வரும் விவ சாயிகளுடைய நிலங்களும் வீடுகளும் (Bought in Land) அனாதீனம் நிலமாக உள்ளது. பல முறை நிலத்தை உரிமை செய்துதர கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது.  தற்போது நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அந்த நிலம் தொடர்பாக முடிவு செய்து வழங்கலாம் என கூறி யுள்ளது. எனவே, ஏழை விவ சாயிகளுக்கு மேற்கண்ட நிலங்கள் அவர்களுக்கு கிடைத்திட ஆவன செய்யு மாறு கேட்டுக் கொள்கி றோம். மேலும் கடந்த 2018-19 பயிர் காப்பீட்டுத் தொகை கோவில்பத்து பகுதி விவ சாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே கணக்கில் விடுபட்ட  இப்பகுதியை சேர்ந்த விவ சாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இன்று மின்தடை  

கும்பகோணம், நவ.30-  கும்பகோணம் சாக்கோட் டை ராஜன்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கும்பகோணம், நாச்சியார் கோயில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருக்கா வூர், வலங்கைமான், ஆலங் குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நவ.30 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோ கம் இருக்காது என கும்பகோ ணம் நகர மின் உதவி செயற் பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை 

புதுக்கோட்டை, நவ.29- தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை யும், தலா ரூ.10 ஆயிரம் அப ராதமும் விதித்து புதுக் கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை அடப்பன் வயலை சேர்ந்தவர் சந்தானம் (42). இவருக்கும் இவரது சகோதரர் மூர்த்தி என்ற சிவ ராம கிருஷ்ணமூர்த்திக்கும் (49) இடையே இடபிரச்சினை இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அவ்வப் போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 23.1.2015 -ந் தேதி புதுக் கோட்டை பால் பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்த சந்தானம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராம கிருஷ்ண மூர்த்தி, இவரது மகன் மணி என்ற மணிகண்டன் (26), விஜய் என்ற விஜய்குமார் (25), முருகன் என்ற திரு முருகன் (24) ஆகிய 4 பேரை யும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த நீதி பதி அப்துல்மாலிக் வெள்ளிக் கிழமையன்று தீர்ப்பு கூறி னார். இடப் பிரச்சினை தொடர் பாக தொழிலாளியை வெட்டி கொலை செய்ததாக மணி கண்டன், விஜய்குமார், திரு முருகன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ.10 ஆயிரம் அபரா தம் விதித்தும், அபராத தொ கையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இந்த வழக்கில் தொடர்புடைய சிவராம கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என்பதற்கு போ திய சாட்சியங்கள் இல்லாத தால், அவரை விடுதலை செய் தும் தீர்ப்பு வழங்கினார்.

;