tamilnadu

img

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

தஞ்சாவூர், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் பனஞ்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளப் பிரமன்காடு உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு பாராட்டு விழா, முன்னாள் மாண வர்கள் சந்திப்பு, பள்ளி வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.  கூட்டத்திற்கு, வட்டாரக் கல்வி அலு வலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார் வையாளர் இரா.வேம்பையன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கு.இராதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஆர்.வல்லத்தரசு, டாக்டர் மதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சி.கணேசன், துணைத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் க.சுகுமாரன், ரா.நீலகண்டன், ரா.ரஞ்சித், தி.அய்யப் பன், பெ.துரைராஜ் கலந்து கொண்ட னர். கூட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல் இப்பகுதி பள்ளி வயதுப் பிள்ளை கள் அனைவரையும் இப்பள்ளியில் சேர்த்திட திட்டமிடப்பட்டது. சுய உத விக்குழு தலைவிகள் பூரணம், இந்திரா, புவனேஸ்வரி கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் வீர. சந்திரசேகரன் வரவேற்றார். ப.மகா ராஜன் நன்றி கூறினார்.