தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பழைய பேராவூரணியில் எம்.நீலகண்டன் நினைவாக 3-ஆம் ஆண்டு சுழற் கோப்பைக்கான கபடிப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக் குமார் முன்னிலை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு முதல் பரிசு 25,003 ரூபாயும், இரண்டாம் பரிசு 20,003 ரூபாயும், மூன்றாம் பரிசு 15,003 ரூபாயும், நான்காம் பரிசு 10,003 ரூபாயும், ஆறுதல் பரிசு 5,003 ரூபாயும் பரிசுகளாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் கன்னியாகுமாரி, காடந்தங்குடி, நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட 27 அணிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை ஆவணம் மறுமலர்ச்சி கபடி கழகம், இரண்டாம் பரிசை நாகப்பட்டினம் புதிய பறவை அணியினர், மூன்றாம் பரிசை காடந்தஙகுடி பாலு நினைவு கபடி அணியினரும், நான்காம் பரிசை பழைய பேராவூரணி எம்.நீலகண்டன் நினைவு கபடிக் குழு அணியினரும், ஆறுதல் பரிசை நாகப்பட்டினம் சென்செட் அணியினரும் வென்றனர். போட்டி ஏற்பாடுகளை எம். நீலகண்டன் நினைவு கபடி குழு நண்பர்கள், பழைய பேராவூரணி இளைஞர்கள் செய்திருந்தனர்.