திருச்சிராப்பள்ளி, ஜூலை 3- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களின் 4 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி 2009-2010-ம் ஆண்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை யை உடனே வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐக்கு பிடித்தம் செய்கின்ற பணத்தை உரிய இடத்தில் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப் பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம் திருச்சி தொலைதொடர்புத்துறை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் மாவட்டத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் பழனிச்சாமி பேசிய தாவது: ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இன்றைய சூழலில் சம்பளம் கிடைக்குமா? கிடைக்காதா என்ற கேள்வி தொழி லாளர்களிடம் உள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என்எல் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்கவில்லை. பிரதமர் மோடி தொகுதியில் கடந்த 1 வருட மாக சம்பளம் வழங்கப்படவில்லை. 1லட்சத்து 20 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லாமல் பிஎஸ்என்எல்ஐ நடத்த முடியாது. பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு ஒப்பந்த ஊழியர்கள் முக்கியம். வேலை செய்தால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது நாடா ளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டம். இந்த சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் கொடுப்பது குறித்து மத்திய அரசி டம் எந்தவிதமான தெளிவான முடிவும் இல்லை. பிரதமர் மோடி தேசப் பற்று இல்லாமல் தனியார் துறைக்கு விளம்பரம் கொடுக்கின்றார். பிஎஸ்என்எல்லுக்கு விளம்பரம் செய்யவில்லை. வருமானத்திற்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை. பேங்க் லோன், லைசன்ஸ் போன்றவற்றை தர மறுத்துவிட்டு, வருமானத்தை அழித்துவிட்டு பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்குகிறது என மத்திய அரசு கூறுகிறது. அதிக வேலை, குறைந்த சம்பளம், நிரந்தரம் இல்லை என்பதுதான் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலையாக உள்ளது. எனவே மத்திய, மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி இயக்கங்களை முன்னெடுத்து சென்று நமது கோரிக்கை களை வென்றெடுப்போம் என்றார். போராட்டத்தில் பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் அஸ்லம்பாஷா, மாவட்டப் பொருளாளர் கோபி, தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சுந்தரராஜூ, மாவட்டச் செயலாளர் முபாரக்அலி, மாவட்டப் பொருளாளர் சண்முகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.