கடலூர், ஜூன் 30- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களவை உறுப்பினர்க ளின் குரலுக்கு மத்திய அரசு மதிப்பு கொடுக்கவில்லை என்றால், டெல்டா மாவட்டங்களில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதான த்தில் சனிக்கிழமையன்று (ஜூன் 29) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத வர்கள் தான் இந்த வெற்றி யால் என்ன பயன் என்று கேட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியினர் பதவி யேற்பின் போது நாடாளு மன்றத்தில் தமிழை ஒலிக்கச் செய்தனர். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பெயர்களையும், சமூகநீதி, சமத்துவம், தொழி லாளர் நலனை பேசினார். இனி நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் இது தொடரும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலேயே காவிரி விவகாரம், நீட் தேர்வு விலக்கு, தமிழ் ஆட்சி மொழி குறித்து பேசினோம்.
அதனை பிரதமரே பாராட்டி யுள்ளார். மும்மொழித் திட்டத்தை எதிர்த்தோம், தமிழகத்தில் ரயில்வேயில் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தி உடனடி வெற்றியும் பெற்றோம். ஆனால் முதல்வர், துணை முதல்வர், 32 அமைச்சர்கள் இருந்தும் தமிழகத்திற்கு என்ன பிர யோஜனம். 1 குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக 104 கிணறு கள் தோண்டப்பட உள்ளது. இதனை மக்களவையில் எழுப்புவோம். செவிசாய்க்க வில்லையெனில் மக்களைத் திரட்டி போராடுவோம். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திமுக கடலூர் மாவட்டச் செயலாளர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் ஆகிய மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா.ராஜேந்திரன், துரை கி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.