நாகப்பட்டினம், மே 18-மனிதர்களின் மூளை புத்திசாலித்தனமாக வளரவும், கருச்சிதைவைத் தவிர்க்கவும், முன் கழுத்துக் கழலை நோய் வராமல் தடுக்கவும் மனிதர்களுக்கு அயோடின் சத்து இன்றியமையாதது. எனவே அயோடின் கலந்த உப்பைமட்டுமே கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாறை உப்பு(ராக் சால்ட்) என்ற பெயரில் அயோடின் கலக்காத உப்பு, நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் சனிக்கிழமை பெரிய கடைத்தெரு ஆஸாத் மார்க்கெட்டில் நடந்தஆய்வில் கடை ஒன்றில் இந்த உப்பு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. உணவுக்காக விற்பனைசெய்யப்படும் உப்பில் அயோடின் கலந்திருக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.