திருத்துறைப்பூண்டி, மே 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு, வடக்கு மற்றும் நகரக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதை எதிர்த்தும், அந்த திட்டத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் சிறப்பு விளக்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு நகரக்குழுச் செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.இராமச்சந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.