திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

திருச்சி விமான நிலையத்தில் போதை பொருள் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.25- திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. புதனன்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு எடுத்து செல்ல இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனைசோதித்த போது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.அவை போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் எடுத்து செல்ல இருந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் 10 லட்சம்இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த பயணியை கைது செய்து தமிழகத்தில் இந்த போதைப்பொருள் எங்கிருந்து யாரிடம் வாங்கப்பட்டது என்று விசாரணை நடத்திவருகின்றனர். 

;