tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் டிச.27- மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சையில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு, போக்கு வரத்துக் கழக அனைத்து சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போக்குவரத்துக் கழக சிஐடியு சங்கத் தலைவர் சா.செங்குட்டுவன்  தலைமை வகித்தார். எட்வின் பாபு முன்னிலை வகித்தார். சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் பி. வெங்கடேசன் கண்டன உரையாற்றி னார். செயலாளர் அ.செ.பழனிவேல், பொருளாளர் ஆர்.முருகேசன் ஆகி யோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் மனித நேயத்தை தகர்த்திடும் சட்டத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செய லாளர் பக்ருதீன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சங்கர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் சுடர்வளவன், காங்கிரஸ் நகர தலைவர் பழனியப்பன், ஜமாத் நிர்வாகிகள் முகமது சரிப், அப்துல்லா, திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மாவளி, தமுமுக மாவட்ட பொறுப்பாளர் நாகூர் கனி, சிபிஐ ஒன்றிய பொறுப்பாளர் விபி. நாகலிங்கம், மக்கள் பாதையின் ஞானசேகர், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், திமுக பொறுப்பாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். சிபிஐ மாநில குழு உறுப்பினர் ராசு, காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், திமுக நகர செயலாளர் அழகப்பன், சிபிஐ பிரதாப்பின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மலை.தேவேந்திரன், மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ஹைதர்அலி, மதிமுக நகர செயலாளர் கே.பி.செந்தில், மனிதநேய மக்கள் கட்சி நகர செய லாளர் நிஜாமுதீன், பொன்னமராவதி ஒன்றிய ஜமாத் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் குடியுரிமை திருத்த மசோதா நகலை கடலில் வீசும் போராட்டம் கோட்டைப் பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமை யில், மாவட்ட துணைச் செயலாளர் சையது அபுதாஹிர், ஒன்றிய செயலா ளர் செல்லஅத்தா ஆகியோர் முன்னி லையில் மாநில செயற்குழு உறுப்பி னர் அப்துல் சலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்டம், ஜனநாயகத்தை அழிக்கும் சட்டம். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சட்டம் வேண்டும் என்ற கண்டன கோஷங்களை எழுப்பி யவாறு கடல் நோக்கி சென்ற மக்க ளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  போராட்டத்தில் கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய துணைச் செய லாளர் நாகூர் கனி. ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, நகர செயலாளர் ஜகுபர், பொருளா ளர் அப்துல் கரேம்,  துணைச் செய லாளர் சேக் அப்துல்லாஹ். இளைஞர் அணிச் செயலாளர் கலந்தர் மைதின். மாணவர் அணி துணைச் செய லாளர் சேக்பரீத் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.