தஞ்சாவூர் பெருமகளூர் பேரூராட்சி லெனின் நகரில் நடைபெறும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரெ.குமரேசன், பொறியாளர் தியாகராஜன், எழுத்தர் எம்.செல்வராஜ், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நீலகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவ.மதிவாணன், முன்னாள் பெருமகளூர் பேரூராட்சி தலைவர் ராமமூர்த்தி, கொன்றை கணேசன் கலந்து கொண்டனர்.