நாகப்பட்டினம், பிப்.28- கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மே ளன தேசியச் செயற்குழு உறுப்பின ருமான அ.தி.அன்பழகன் விளக்கவு ரையாற்றினார். நாகை வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், மாவட்டத் துணைத் தலைவர் சி.வாசுகி, அரசுப் போக்கு வரத்துத் தொழிலாளர் சங்க மண்ட லச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்தி ரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். முன்னாள் தேசியச் செயற்குழு உறுப்பினர் சு.சிவகுமார் நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார். புதுக்கோட்டை இதே போல் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஐபருல்லா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்க சாமி உள்ளிட்டோர் பேசினர்.