tamilnadu

img

சிஐடியு பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.16- சுதந்திர தின கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று மாலை உறையூர் குறத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். ராமச்சந்திரன் வரவேற்றார். கருணாநிதி, மாதவன், செல்வராஜ், ஜெயராமன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில செயலாளர் கோபிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், சீனிவாசன், செல்வி, மணிகண்டன், மணிமாறன், சித்ரா, பக்ருதீன்பாபு, பிரமிளா, மகேந்திரன், வீரமுத்து, ராஜூ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை விஎன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.