tamilnadu

img

அல்லித்துறையில் களமாடிய 200 காளைகள்

திருச்சிராப்பள்ளி, மே 19-திருச்சி அடுத்த அல்லித்துறை மாரியம்மன் கோவில் வைகாசி விழாவையொட்டி ஞாயிறு அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். முதலில் கோவில் காளைவாடிவாசல் வழியாக வந்தது. பின்னர்ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகளை,மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயற்சித்தனர். இதில் 15 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.