வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விருதை திரும்ப ஒப்படைத்த தலைமை ஆசிரியர்

 தருமபுரி, ஜன. 20- 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு வைக்கப்படும் பொதுத்தேர்வை எதிர்த்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தனக்கு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை திரும்ப வழங்குவதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதி யான்கோட்டை, வஊசி தெருவை சேர்ந்தவர் வே.அல்லிமுத்து. இவர் சோளியானூர் அரசு நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையானது 5 மற்றும் 8ஆம் வகுப்புக ளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு  விடுத்தது. இவ்வாறு பொதுத்தேர்வு நடத்தப்பட் டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மன நலம் பாதிக்கப்படும்.  ஆகவே, பொதுத்தேர்வுக்கும், தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வே.அல்லிமுத்து தனக்கு வழங் கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசி டம் திரும்ப அளிக்க உள்ளதாக கூறி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விருதுடன் வந்திருந்தார். இதன்காரணமாக ஆட்சியர் அலு வலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

;