தஞ்சாவூர், நவ.17- கம்யூனிச இயக்கத்தின் தியாகி வாட்டாக்குடி இரணி யனின் தங்கை சிவபாக்கி யம் (வயது 91) காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை ஒன்றியம் ஒதியடிக் காட்டில் வசித்து வந்த சிவபாக்கியம் அம்மை யார் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கால மானார். கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்து போராட்டங் களிலும் பங்கேற்றவர். சிவப்புத் துண்டு அணிந்தவர்களைக் கண் டால், அவர்களை அழைத் துப் பேசி, தேநீர், உணவு அளித்து உபசரிக்கும் அள விற்கு, பொதுவுடமை இயக் கத்தில் பற்றுக்கொண்டவ ராக இருந்தார். ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது, இப்பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதில் இவரது பங்களிப்பு மகத்தானது. அன்னராது இறுதி நிகழ்ச்சி ஞாயிறு மாலை நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். சி.பழனிவேலு, பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, எஸ்.சுப் பிரமணியன், ஏ.எம்.வேதாச் சலம், ஆர்.பெரியசாமி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.