சென்னை, மார்ச் 27- தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே 15 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டிருந்த நிலையில், சென்னையி லிருந்து சேலம் சென்ற 4 இந்தோனேசி யர்கள், அவர்களது பயண வழிகாட்டி, நியூசிலாந்து மற்றும் லண்டனில் இருந்து திரும்பிய இருவர் மற்றும் சைதாப்பேட்டை யைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்ற நபரோடு தொடர்பில் இருந்த 18 வயது இளைஞர், துபாயில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட் டைக்குத் திரும்பிய 65 வயது முதியவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுற்றி வந்த தாய்லாந்து நாட்டினரோடு தொடர்பில் இருந்த 66 வயது முதியவர் ஆகியோ ருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா உறுதிப்படுத் தப்பட்டுள்ள தாக சுகாதாரத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
விமான நிலைய சோதனையில் அவ ருக்கு பாதிப்பு அறிகுறிகள் தென்பட்ட தையடுத்து திருச்சி அரசு தலைமை மருத்து வமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதிப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை சைதாப் பேட்டையைச் சேர்ந்த 24 வயது இளை ஞர் மற்றும் 65 மூதாட்டி இருவருக்கும் கொரோனா உறுதிப்படுத் தப்பட்டுள்ள தாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இவர்கள் லண்டனில் திருங்க் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மதுரையில் கொரோ னாவால் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வெள்ளியன்று (மார்ச் 27) சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள இல்லத்தில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோ சனை நடத்தினார்.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செய லாளர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலா ளர் க.சண்முகம், காவல்துறை தலைவர் திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் உள்ளிட்டோரும் பங் கேற்றனர்.