tamilnadu

img

பொறியியல் கலந்தாய்வு குறித்து மாணவர்கள் கவலை

தமிழகத்தில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி முடிகிறது. இன்னும் மாநில உயர்கல்வித்துறை சார்பில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. குறிப்பாக, கலந்தாய்வை நடத்தப்போவது அண்ணா பல்கலைக்கழகமா அல்லது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமாக என்பது உறுதியாகவில்லை. 


கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வு நடத்தியது அண்ணா பல்கலைக்கழகம். அண்மையில் கமிட்டியில் உயர்கல்வித்துறை செய்த மாற்றங்களுக்கு அதிருப்தி தெரிவித்து தமிழ்நாட்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர் பதவியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்தார்.


இதனையடுத்து, இந்த ஆண்டு பொறியில் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தகவல் வெளியானது. ஆனால் இது பற்றி உயர்கல்வித்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.