மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டு மல்ல சுதந்திரமாக செயல்படும் ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளது. மக்களவைத் தேர்த லில் தனக்கு கிடைத்த பெரும்பான்மையை அது தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக தேர்தல் முடிவுகளை அது பார்ப்பதால் வரும் கோளாறு இவையெல்லாம். பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின்னர் பலமுறை ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. நேர்மையான முறையில் செய்திகளை கொடுத்துக்கொண்டி ருந்த பல ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர். அல்லது அரசுக்கு எதிரான செய்திகளை எழுதவேண்டாம் என்று நிர்பந்திக்கப்பட்டனர்.அது முதல் இன்னிங்ஸ். தற்போது 2வது இன்னிங்சில் தனக்கு எதிராக செய்திகள், செய்திக் கட்டுரைகளே வரக்கூடாது என்று மோடி அரசு நினைக்கிறது. அப்படி மீறி வந்தால் அந்த பத்திரிகைகளை ஒடுக்கவும் தயங்கமாட்டோம் என்பதை செயலில் காட்டியும் விட்டனர்.
ஜால்ராவுக்கே அதோகதி என்றால் மற்றவர்களுக்கு.....
இந்தியாவில் 2 கோடியே 60 லட்சம் வாசகர்களை கொண்டுள்ள மூன்று முக்கியமான தேசிய நாளிதழ்க ளுக்கான மத்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் 2வது முறையாக மோடி அரசு பதவியேற்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இது தேசிய நாளிதழ்களை முடக்கும் செயல் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மற்றும் ‘எகனாமிக் டைம்ஸ்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தும் பென்னட் கோல்மேன் அன்ட் கோ நிர்வாகி ஒருவர் கூறுகிறார். இந்த குழுமத்தின் நாளிதழ்கள் மோடி அரசின் பல அத்துமீறல்களை ஆதரித்தும் எழுதியுள்ளன. இருப்பினும் சில நேரங்களில் பலதரப்பு வாசகர்களை தக்கவைத்துக்கொள்ள அரசின் மீது சில விமர்சனப் பூர்வமான கருத்துக்களை தெரிவித்து விடுகிறது. அதுபோன்ற நேரங்களில் மத்திய ஆட்சியாளர்கள் எரிச்சலடைகிறார்கள். இந்த நாளிதழின் சில செய்திகள் மகிழ்ச்சிதரக்கூடியதாக இல்லை என்று அரசுத் தரப்பில் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டதாம். மோடிக்கு ஜால்ரா அடிக்கும் குழுமத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்ற பத்திரிகைகளின் நிலையை புரிந்து கொள்ளுங்கள்.
விளம்பரங்களை வெட்டிய மோடி அரசு
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மொத்த விளம்பர வருமானத்தில் 15விழுக்காடு மத்திய அரசின் விளம்பரங்களில் இருந்து கிடைப்பவை. அரசு ஒப்பந்த புள்ளி விளம்பரங்கள், அரசு திட்டங்கள் ஆகியவை தொடர்பானவை அந்த விளம்பரங்கள். இதேபோல் மோடி அரசால் பழிவாங்கப்பட்டுள்ள மற்றொரு ஊடகக் குழுமம் ஏபிபி குழுமம். இந்தகுழுமத்தின் சார்பில் தான் தி டெலிகிராப் நாளிதழ் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாளித ழான அதற்கும் விளம்பரங்களை மோடி அரசு நிறுத்தி விட்டது. மத்திய பாஜக அரசின் தேசிய பாதுகாப்புக் கொள்கை, அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றை இந்த பத்திரிகை கேள்வி கேட்டதால் வந்த வினை. “உங்களது நாளிதழின் தலையங்கத்தில் அரசுக்கு ஆதரவான வரிகள் இருக்கவேண்டும். மாறாக அரசுக்கு எதிரான வரிகள் இடம்பெற்றிருந்தால் உங்களை அரசு தண்டிக்கும். அதாவது உங்களுக்கான அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படும்.’’ இதுதான் தற்போது நடக்கிறது என்கிறார் ஏபிபி குழுமத்தின் ஓர் உயர் அதிகாரி. இதுகுறித்து அரசிடம் முறையிட்டால் அங்கிருந்து பதில் கூட வருவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்த அவர் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதால் அந்த வருவாய் இடைவெளியைப் போக்க மாற்று வழிகளை தேடிக்கொண்டி ருக்கிறோம் என்கிறார். முக்கியான 3 தேசிய நாளிதழ்களுக்கான விளம்பரங்கள் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவ னத்தின் செய்தியாளர், மத்திய அரசின் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகம் செய்யும் ‘பீரோ ஆப் ஆவுட்ரீச் அன்ட் கம்யூனிகேஷன்’ என்ற விளம்பர நிறுவனத்தை மின்னஞ்சல் மூலமாக அணுகியபோது அதன் தலைமை இயக்குநர் சத்திய பிரகாஷ் பதிலளிக்க மறுத்துவிட்டார். தொலைபேசி வாயிலாக முயற்சித்தபோதும் அவர் பேசமறுத்துவிட்டார். அவர் எப்படி பேசுவார்? அவரது வாயும் ஆட்சியாளர்களால் பூட்டப்பட்டுள்ளதே!
பழிவாங்கப்படும் ‘தி இந்து’ நாளிதழ்
மத்திய பாஜக அரசால் பழிவாங்கப்பட்டுள்ள மற்றொரு தேசிய நாளிதழ் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சுதந்திரத்திற்கு முன்பிருந்து செயல்பட்டு வரும்“ தி இந்து’’ பத்திரிகை. கஸ்தூரி அன்ட் சன்ஸ் குழுமத்தால் இது வெளியிடப்படுகிறது. இந்த குழுமத்தின் வெளியீடுக ளுக்கு மத்திய அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்தியா வாங்கவுள்ள பல்லாயி ரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் போர் விமான கொள்முத லில் நிகழ்ந்துள்ள மோசடிகளை இந்து நாளிதழ் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. ரபேல் நிறுவனத்துடன் பாது காப்புத்துறை அமைச்சகம் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரதமர் அலுவலகமும் தனியாக பேசிக்கொண்டிருந்தது.இது பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில் இருந்து கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்தது.அதை இந்து வெளியிட்டதால் கடும் ஆத்திரமடைந்த மோடி அரசு அந்த ஊடகக் குழுமத்திற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 2வதுமுறையாக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வேலையாக இந்து குழு மத்திற்கான விளம்பரங்களை நிறுத்தி பழிவாங்கிவிட்டது.
பாஜகவின் பச்சைப் பொய்
மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோதமான நடவடிக்கை எதைக் காட்டுகிறது என்றால் அரசின் ஊதுகுழலாக ஊடகங்கள் இருக்கவேண்டும், வேறு வகையில் குரல் எழுப்பினால் தண்டிக்கப்படுவீர்கள் என்பது தான். இப்படி ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கும் பாஜக அரசு, மறுபுறம் தனது செய்தித் தொடர்பாளர்களை வைத்து இந்தியாவில் ஊடக சுதந்திரம் பராமரிக்கப்பட்டு வருவதாக நா கூசாமல் பொய் பேசிக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, எதிர்த்து கேள்வி கேட்பது ஊடக சுதந்திரம் என்றும் அது இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பாஜக செய்தி தொடர்பாளரான நளின் கோலி கூறுகிறார். ஊடகங்களின் கழுத்தை பாஜக அரசு நெரிப்பதாக கூறப்படு வது தவறு என்றும் அவர் கூறிக்கொண்டார்.
மோசமான ஊடக சுதந்திரம்
உலகிலேயே ஊடக சுதந்திரத்திற்கான குறியீட் டெண்ணில் மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் தான் உள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை விட இந்தியா மோச மான இடத்தில் உள்ளது. 2002ல் இந்த குறியீட்டெண் தொடங்கப்பட்டபோது 139 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா ஊடக சுதந்திரத்தில் 80-வது இடத்தில் இருந்தது.
அரசின் ஊதுகுழலா பிரஸ் கவுன்சில்?
விளம்பர பிரச்சனை ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்திய பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டிய பிசிஐ எனப்படும் இந்திய பிரஸ் கவுன்சில் அரசுக்கு ஒத்து ஊதும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசிகள். செல்போன், இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பத்திரிகை களும் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. கடந்த வாரம் காஷ்மீரில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகள் தங்களது தலையங்கப் பக்கத்தை வெற்றிடமாக விட்டிருந்தன. அந்த மாநில மக்களின், பத்திரிகைகளின் சுதந்திரத்தை நெரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை பிரஸ் கவுன்சில் ஆதரித்து வருகிறது. “ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு ஆளுநர் அரசுக்கு உத்தரவிடவேண்டும் ’’ என்று காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது.அதே அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு குடிமக்களின் பேச்சுரிமை எழுத்துரிமையை பாதுகாக்கிறது.இந்திய ஒருமைப்பாட்டை யும் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக பிரஸ் கவுன்சில் கூறுகிறது.
சுதந்திரமான ஊடகம் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எப்படி அச்சுறுத்தலாக இருக்கமுடியும்? ஊடகங்களின் சுதந்திரம், அவற்றின் பணிகளை பாதுகாக்கவேண்டிய பிரஸ் கவுன்சில் அதற்கு மாறாக, அரசின் குரலாக நடந்து கொள்வதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயக சமூகத்தில் பத்திரிகைகள் சுதந்திரமாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட அனுமதிக்கவேண்டும். கருத்துச்சொல்ல உரிமை உண்டு என்று கூறிக்கொண்டே மாற்றுக்கருத்துக்களை அனுமதிக்கமுடியாது என்று கூறுவது எப்படி நியாயமாகும் என்று காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகைகள் பிரஸ் கவுன்சிலை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளன.
குரல்வளையை நெரிக்க முட்டுக்கொடுக்கலாமா?
அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பிரஸ் கவுன்சில் என்பது ஊடகங்களை பாது காக்கும் ஒரு அமைப்பு. அது தனது பாதையில் இருந்து தடம்புரளக் கூடாது. 1990களில் அயோத்தி பிரச்சனை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்தபோது ஊடகங்கள் நெறி தவறாமல் நேர்மையாகவும் சார்பு நிலையின்றி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியதும் இதே பிரஸ்கவுன்சில்தான். அப்போது சில பத்திரிகைகள் மதச்சார்பு தன்மையுடன் அயோத்தி விவகாரத்தை அணுகிய போது அதனை கண்டித்ததும் இதே பிரஸ் கவுன்சில்தான். எனவே பிரஸ் கவுன்சில் என்பது ஊடகங்களின் சுயேச்சை யான பணியை பாதுகாக்க துணை நிற்கவேண்டுமே தவிர ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் அரசின் செயலுக்கு முட்டுக்கொடுக்கக் கூடாது.