tamilnadu

img

திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியான ”அவெஞ்சர்ஸ்”

அவெஞ்சர்ஸ் திரைபடம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது, ஆனால் இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது.

அவெஞ்சர்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் இன்று இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைக்கு வருகிறது.

இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர். 

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் இன்று திரைக்கு வரும் நிலையில் இதன் தமிழ் பதிப்பு இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது. இது ஹாலிவுட் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


;