tamilnadu

தஞ்சாவூர், திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஓட்டு எண்ணும் மையத்தில் மது போதையில் ஊழியர்

தஞ்சாவூர், ஜன.2 –  கும்பகோணம் அருகே வாக்கு எண்ணும் மையத்தி ற்கு மது போதையில் வந்த ஆசிரியரை, பணி ஆணை யை பறிமுதல் செய்து வெளி யேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த, திருவிடைமருதுார், திருவா வடுதுறை ஆதீனம் மேல் நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணப்பட்டது. வியாழக் கிழமை காலை ஓட்டு எண்ணும் பணிக்கு, ஆடு துறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரி யராக வேலை செய்யும் தஞ் சையை சேர்ந்த தென்றல் குமார் (48) மது போதையில் வந்திருந்தார். அவரை காவல்துறையினர் உள்ளே செல்லக் கூடாது என தடுத்து நிறுத்தி, அவர் வைத்திருந்த ஷோல்டர் பேக்கை சோதனை செய்துள் ளனர். அதில் ஒரு துண்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குவாட்டர் மது பாட்டிலை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுபற்றி உட னடியாக உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கு வந்த திருவிடைமருதுார் காவல் துணை கண்கா ணிப்பாளர் அசோகன் அவ ருக்கு கொடுத்த பணிக்கான ஆணையை பறிமுதல் செய்து அவரை அங்கிருந்து வெளியேற்றினார். அவரை பற்றிய வேறு எந்த தகவலை யும் காவல்துறையினர்தெரி விக்க மறுத்து விட்டனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்,ஜன.2- திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம்தீர்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபதி ராஜா(27).இவர் குடும்பத்தோடு திருப்பூர் பாப்பன் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பிரசவத்திற்கு பூபதிராஜா வின் மனைவி சொந்த ஊருக்கு சென்றுள் ளார், இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி சிறுமியை திருமண ஆசை கூறி திண்டுக்கல் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி மாயமானதால் அவரது பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து,திண்டுக்கல் சென்று சிறுமியை மீட்டு பூபதிராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்நிலையில் செவ்வாயன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளியான பூபதி ராஜாவிற்கு ஆள் கடத்தல் பிரிவிற்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம், பாலியல் குற்றத் துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

;