தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், குளிரில் வாடும் ஆதரவற்ற 90 பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு போர்வைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை சங்கத்தின், கலாம்-20 முதுமையை மதிக்கலாம் பிரிவின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், லயன்ஸ் மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சங்க நிர்வாகிகள் என்.ஆறுமுகச்சாமி, எம். முகமது அபூபக்கர், முல்லை ஆர். மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.