தஞ்சாவூர், ஜன.9- தஞ்சாவூர் மாவட்டம் அதி ராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நி லைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி பள்ளி வளா கத்தில் புதன்கிழமை நடை பெற்றது. கண்காட்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம். எஸ்.முகமது ஆஜம் தலை மை வகித்தார். கண்கா ட்சியை ஹாஜி எஸ்.எம்.முக மது ரபி தொடங்கி வைத்தார். இதில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, இய ற்கை விவசாயம், பாரம்பரிய உணவு, இயற்கைப் பேரி டர் முன்னெச்சரிக்கை, திடக்க ழிவு மேலாண்மை, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி ப்படுத்தியிருந்தனர். இதில், காட்சிப் படுத்தப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பா ற்றும் நவீன இயந்தி ரத்தின் மாதிரி பார்வையா ளர்களைப் பெரிதும் கவர்ந்தது. காட்சிப்படு த்தப்பட்டி ருந்த அறிவியல் படைப்பு களை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை ஆசி ரியர்கள் பாராட்டினர்.