மன்னார்குடி: மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னார்குடி பவர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். நிகழாண்டின், ஜேசிஐ மன்னார்குடி பவர் அமைப்பின் தலைவராக பொறியாளர் சு.சங்கர் குமார், செயலாளராக செ.குமார், பொருளாளராக சூ.விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக மொழிப்புலத் தலைவர் இரா.காமராசு கலந்து கொண்டார். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, ஜேசிஐ மண்டலத் தலைவர் ஜெ.ஜெயச்சந்திரன், மண்டல துணைத்தலைவர் பி.பாலமுருகன், தேசியப் பயிற்சியாளர் சா.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் வரைப்பட கருவிகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மண்டலச் செயலாளர் சா.கார்த்திகேயன், மண்டல இயக்குநர்கள் இ.ராபர்ட் கென்னடி வீ.காந்திலெனின் க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.