tamilnadu

கல்லூரியில் வாயில் முழக்கப் போராட்டம்

தஞ்சாவூர், ஜன.8- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அடையாள அட்டை அணிந்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பேராசிரியர்கள் சார்பில் வாயில் முழக்கம் போராட்டம் நடைபெற்றது.  அனைவருக்கும் ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம், பொதுத்துறையை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக புதன்கிழமை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆசிரியர்கள் கழக பேராசிரியர்கள் அடையாள அட்டை அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளைத் தலைவர் பேரா.முத்தமிழ் திருமகள் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பேரா.இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.