தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காந்தி பூங்கா அருகில் அதிமுக ஒன்றியக் கழகம் சார்பில் அதிமுக நிறுவன தலை வர் எம்ஜிஆர் 103 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக பேராவூரணி ஒன்றி யச் செயலாளர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி இணைச் செய லாளர் ஆர்.பி.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, தலைமைக் கழக பேச்சாளர் உத்திராதேவி ஆகியோர் பேசினர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் எஸ்.வி.பி.ரவிசங்கர், எம்.சுந்தர்ராஜன், குழ.செ.அருள்நம்பி, கோவி. இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.