தஞ்சாவூர் அக்.6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி பெரியகுளம் ஏரி இளைஞ ர்களால் தூர்வாரப்பட்டு கடல் போல தண்ணீர் நிரம்பி வருகிறது. பொதுமக்களும், விவசாயிகளும், இப்பணியில் ஈடுபட்ட இளைஞ ர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பேராவூரணி பெரியகுளம் ஏரி விவசாய நிலங்களுக்கு மத்தியில் 562 ஏக்கர் பரப்பளவில் அமைந்து ள்ளது. இக்குளத்தின் தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி யாகவும், நீர் மோட்டார் மூலமாக வும் பொன்காடு, முடப்புளிக்காடு, பேராவூரணி, பழைய பேராவூரணி, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், கூப்புளிக்காடு ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், பெரியகுளம் ஏரி 30 ஆண்டுகள் மேலாக தூர் வாரப்ப டாமல் இருந்தது. பெரியகுளம் ஏரி முழுமையாக தண்ணீர் நிரம்பி 7 வரு டங்களுக்கு மேலாகிய நிலையில் இருந்தது. மேலும் நகரில் உள்ள குப்பைகள், கட்டிடக் கழிவுகள், புயலால் சாய்ந்த மரங்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, நீர்வ ரத்து பாதைகள் அடைக்கப்பட்டு, மணல் மேடிட்ட நிலையில் மரங்க ளும், புதர்களும் மண்டிய நிலையில், பல ஆயிரம் ஏக்கர் பாசன த்திற்கு, பயன்பட்டு வந்த பெரியகு ளம் ஏரி இருந்தது. இதையடுத்து, பேராவூரணி பகுதி இளைஞர்களால் கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் ராம்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கார்த்தி கேயன், நிர்வாகிகள் நவீன், திருவே ங்கடம், நிமல்ராகவன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பேராவூரணி பெரியகுளம் ஏரி பாசனதாரர்க ளான பொன்காடு, முடப்புளி க்காடு, பேராவூரணி, பழைய பேராவூரணி, ஆதனூர், கூப்பு ளிக்காடு கிராமத்தார்கள், மற்றும் இளைஞர்களைச் சந்தித்து, ஏரியை தூர்வாரும் முயற்சிக்கு ஆதரவு கேட்டனர். இதில் விவசாயிகள், பொதுமக்கள், பாசனதாரர்கள் கரம் கோர்த்தனர். அதன் பின்னர் கடந்த ஜூன் 24ம் தேதி பெரியகுளம் ஏரியை தூர்வா ரும் பணி தொடங்கியது. ஜேசிபி இய ந்திரம் மற்றும் டிராக்டர் வாகன ங்களை பயன்படுத்தி மண் எடுத்து கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளில் நட க்கும் பணிக்கு ஆகும் செலவான ரூ.20 ஆயிரத்தை பொன்காடு பகுதி இளைஞர்கள் ஏற்றுக் கொண்ட னர். அன்றிலிருந்து கைஃபா இளை ஞர்கள் பொதுமக்களிடம் நிதி வசூ லித்து, பெரியகுளம் ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது. மேலும் பொன்காடு கிராமத்தினர் ரூ.1 லட்சத்து 51 ஆயிரமும், பழைய பேராவூரணி கிராமத்தினர் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம், கடந்த மூன்று மாதம் நிதி ரூ.23 லட்சத்து 80 ஆயி ரத்து 960 தொகையை வசூல் செய்த னர். இதில் ரூ 22 லட்சத்து 4 ஆயி ரத்து 633 தூர் வாரும் பணிக்கு செல விடப்பட்டது. மீதி ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 327 கையிருப்பில் வை த்துள்ளனர். இப்பணிக்காக அரசை எதி ர்பார்த்து காத்திராமல், தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளை ஞர்களுக்கு பலரும் நிதி உதவி அளிக்க முன்வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் ஆர்.சுரே ஷ்குமார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அன்பு செல்வன், திருநெல்வேலி துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் நேரில் ஏரியை தூர்வாரும் பணியை பார்வையிட்டு, இளை ஞர்களுக்கு பாராட்டினர். பெரியகுளம் ஏரி தூர்வா ரும் பணி 100 நாட்கள் கடந்து உள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டு 25ம் தேதியிலிருந்து பெரியகுளம் ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வரு கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் ஏரியில் தண்ணீர் கிடந்தது போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் விவ சாயிகள் அனைத்து தரப்பு மக்களும் கைஃபா இளைஞ ர்களை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்.7 அன்று, கைஃபா அமைப்பு சார்பில் பேராவூ ரணி எஸ்.டி.டி திருமண அரங்கில் பெரியகுளம் சீரமைப்பு பணி நிறைவு, நன்கொடையாள ர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நன்றி தெரிவித்தல், மரம் தங்கசாமி நினைவு மரம் நடுவிழா, மற்றும் சீரமைப்பு பணியில் ஆதரவளித்த அமைப்புகளுக்கு விருது வழ ங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியர்கள், அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.